சினிமா

நெகடிவ் ரோல்களில் நடிக்க ஆசை: ட்விட்டரில் ரவி தேஜா! 

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நேற்று ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் நேரடியாக சாட் செய்தார். அப்போது அவர் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு மனம் திறந்து வெளிப்படையான பதில்களைத் தெரிவித்தார்.

KV

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நேற்று ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் நேரடியாக சாட் செய்தார். அப்போது அவர் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு மனம் திறந்து வெளிப்படையான பதில்களைத் தெரிவித்தார். உரையாடலின் ஊடே ஒரு ரசிகர் ‘நீங்கள் நெகடிவ் ரோல்களில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு; ஆம், அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்துக்காகத் தான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.”

மேலும் அவர் தனக்கு இயக்குனராகும் ஆசையும் இருக்கிறது என்றும் ஆனால் அந்த ஆசை எப்போது நிறைவேறும்! என்பது குறித்து இப்போதைக்கு உடனடியாகச் சொல்ல முடியாத அளவுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பட வேலைகள் இருப்பதால் அவை முடிந்ததும் அறிவிக்க இருப்பதாகவும் கூறினார்.

மேலும் ரசிகர்களுடனான சாட்டிங் இறுதியில் ரவி தனது அடுத்த படமான ‘ராஜா தி கிரேட்’ படத்தின் படப்பிடிப்பி ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அந்தப் படத்தில் கண் பார்வை அற்றவராக தான் நடிக்கவிருப்பதாகவும் ரவி தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவி, நாகார்ஜூனா, பாலகிருஷ்ணா, என பெரிய நடிகர்களின் வாரிசுகளும், மருமகன்களும் மெகாஸ் ஸ்டார்களாக இறங்கி அடித்து ஆடிக் கொண்டிருந்த தெலுங்குப் படவுலகில் ரசிகர்களிடையே தன்னையும் ஒரு  சூப்பர் ஹீரோ வாக நிலை நிறுத்துவதற்கு முன்பு ரவி நெகடிவ் ரோல்களும் செய்து கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத் தக்க விசயம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: ஏழைகளுக்கு நல உதவி

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

SCROLL FOR NEXT