சினிமா

பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு, தமிழ் ராக்கர்ஸில் வெளியீடு - காலாவை துரத்தும் பிரச்சனை

DIN

ரஜினி நடிப்பில் வெளியான காலா திரைப்படம் பேஸ்புக் மற்றும் தமிழ் ராக்கர்ஸில் வெளியானது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் காலா. இந்த திரைப்படம் ரஜினியின் 2.ஓ படத்துக்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2.ஓ பணிகள் இன்னும் முடியாததால் காலா அதற்கு முன்னதாக வெளியாகிறது. 

இந்த படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு என்னவென்றால் ரஜினிகாந்த் பல வருட குழப்பங்களுக்கு பிறகு அரசியலில் களமிறங்குவதாக அறிவித்த பின் வெளியாக இருக்கும் முதல் திரைப்படம். ரஜினி அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தபின் விமரிசனங்கள் தொடர்ந்து அவரை துரத்திக் கொண்டே இருக்கிறது. 

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக பேசியதாக கர்நாடகத்தில் வெளியிட மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை மறுப்பு தெரிவித்தது. கர்நாடக முதல்வர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, காலா வெளியாக இருக்கும் திரையரங்குகளில் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார். ஆனால், தற்போதைய நிலையில் காலா வெளியாவது சரியானதல்ல என்று அவர் தெரிவித்தார். 

இதையடுத்து, ரஜினி நேற்று (புதன்கிழமை) காலை செய்தியாளர்களை சந்தித்து உருக்கமாக பேசினார். இது ஒரு புறம் இருக்கும் சென்னையில் 2 திரையரங்குகள் காலாவை திரையிடமாட்டோம் என்று கூறினர். ஏற்கனவே, தொடக்கத்தில் இருந்தே வழக்கமாக இருக்கும் ரஜினி படத்துக்கான மோகம் காலாவுக்கு குறைவாக இருந்தது. முன்பதிவுகள் மந்தமாக இருந்தது.  

இதற்கிடையில். உச்சநீதிமன்றமும் ஒரு வழக்கில் காலா படத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. பின்னர், கர்நாடகாவிலும் 130 திரையரங்குகளில் காலா வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், காலா படக்குழுவினர் ஓரளவு பெரூமூச்சு விட நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து காலா திரைப்படம் சுமார் 45 நிமிடம் வரை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால், காலா படக்குழுவினர் மீண்டும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அதனை ஒளிபரப்பிய நபர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டதாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார். 

இதையடுத்து, காலா திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் வெளியானது. இதனால், காலா படக்குழுவினர் மேலும் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே, முன்பதிவு டிக்கெட் விற்பனைகள் மந்தமாக இருந்த நிலையில், தற்போது இணையதளத்திலும் வெளியாகி இருப்பது காலா படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை காலா சிறப்புக் காட்சி வெளியாவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க, காலா வெளியாகி இருக்கும் திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT