சினிமா

பிகில் பட இசை வெளியீட்டு விழாவுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் - நடிகர் விஜய் அறிவுறுத்தல்!

வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ள பிகில் பட இசை வெளியீட்டு விழாவுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். 

Muthumari

வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ள பிகில் பட இசை வெளியீட்டு விழாவுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.  

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ விபத்துக்குள்ளான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலர் தனது இரங்கலையும், பேனர் வைக்கும் கலாச்சாரத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், விஜயின் 'பிகில்' பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என்றும், அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எக்காரணத்தைக் கொண்டும் பொதுமக்களை இடையூறு செய்யும் விதத்தில் பேனர்கள் வைப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகியப் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பிகில்' படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு.

2019 தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் இப்படத்தின் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் என இரு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதர பாடல்கள் வருகிற 19ம் தேதி சென்னையில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் ரிலீஸாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“அன்னைக்கே உன்ன தட்டிருக்கணும்” மயிலாடுதுறை ஆணவக்கொலை சம்பவம்: பெண்ணின் தாயார் மிரட்டிய விடியோ!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

“Feel Good, Comedy Film!” குமாரசம்பவம் படம் பற்றி பிரபலங்கள்!

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

மீனா பிறந்த நாளில் த்ரிஷ்யம் 3 போஸ்டர்!

SCROLL FOR NEXT