தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவசியம்: நடிகர் பார்த்திபன்
அனைவரும் அவசியம் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நடிகரும் இயக்குநருமான ரா.பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைவரும் அவசியம் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நடிகரும் இயக்குநருமான ரா.பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ‘நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல... ஐந்தாண்டு கால குத்தகை!’ என்று சுட்டுரையில் பதிவிட்டிருந்த பார்த்திபன், வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டிருந்ததாவது, ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு வணக்கமும் நன்றியும்.
இரண்டாம் தவனை கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது. இதனால் வருத்தமும்,இயலாமையும்.
முகம் முழுவதும் வீங்கிவிட்டது. டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன். எனவே அனைவரும் கரோனா தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்
மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற எதிர்வினைகள் ஏற்படும். அதுவும் எனக்கு ஏற்கனவே ஒவ்வாமை பிரச்னை இருந்ததால் மட்டுமே அதிகமானது என்று பதிவிட்டுள்ளார்.