முகப்பு
சினிமா

' அயன் ' பாடலில் அசத்திய சிறுவர்கள் - நடிகர் சூர்யா வாழ்த்து

கைப்பேசியின் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் அதிவேகமாக வளர்வதைப்  போல இளைஞர்களின் செயல்களும் வளர்ந்துவருகிறது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
' அயன் ' பாடலில் அசத்திய சிறுவர்கள் - நடிகர் சூர்யா வாழ்த்து
பகிர்:

கைப்பேசியின் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் அதிவேகமாக வளர்வதைப்  போல இளைஞர்களின் செயல்களும் வளர்ந்துவருகிறது. பல நாட்கள் காத்திருந்து பெரும் பொருட்செலவில் உருவான பாடல்களைக் கூட எந்த ஒரு நவீன காமராவின் உதவியும் இல்லாமல் ரசிக்கும் படி விடியோ எடுத்து வெளியிடுகிறார்கள். சமீபத்தில் 'நெல்லூர் குரலு ' என்கிற யூடுப் தளத்தில் சிறுவர்கள்  ' வக்கீல் சாப் ' திரைப்படத்தின் சண்டைக்காட்சியை காணொலியாக எடுத்து வெளியிட்டனர் .சினிமா ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சளைத்தவர்களில்லை என இந்தியா முழுவதும் அந்த விடியோ வைரலானது. 

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் ராஜாஜி நகரைச் சேர்ந்த சிறுவர்கள் சூர்யா நடித்து பெரும் வெற்றி பெற்ற ' அயன் ' திரைப்படத்தின் ' பளபளக்கற பகலா நீ ' என்கிற முழுப்பாடலை தங்களுடைய நடனத்தின் மூலம் படத்தில் காட்டப்பட்டது  போலவே எடுத்து அசத்தியிருக்கிறார்கள். இது சூர்யாவின் பிறந்தநாளன்று வெளியாகி வைரலாகிக்கொண்டிருந்த நேரத்தில் நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர்களை வாழ்த்தியதோடு  ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் " திருவனந்தபுரம் ராஜாஜி நகரைச் சேர்ந்த சிறுவர்கள் உருவாக்கிய அயன் பாடலின் விடியோவைப் பார்த்தேன். என்ன ஒரு அற்புதமான பணி. முழுவதும் ரசித்தேன் . எந்த ஒரு தொழிநுட்பமும் இல்லாமல் இதைச் செய்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன் வெளியான அயன் படத்தின் நினைவுகள் வருகிறது. இயக்குநர் கே.வி.ஆனந்த் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். ஆர்வமும் தேடலும் இருந்தால் யாரும் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த சிறுவர்கள் ஒரு உதாரணம் . அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள " என தெரிவித்திருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →