ஆந்திரத்தில் ஜூலை - 31 முதல் திறக்கப்படும் திரையரங்குகள் 
சினிமா

ஆந்திரத்தில் ஜூலை - 31 முதல் திறக்கப்படும் திரையரங்குகள்

ஆந்திரத்தில் கரோனாவின் தொற்று  குறைந்து வருவதால்   ஜூலை 31  முதல் திரையரங்குகள் திறக்கப்பட இருக்கின்றன. 

DIN

ஆந்திரத்தில் கரோனாவின் தொற்று  குறைந்து வருவதால்   ஜூலை 31  முதல் திரையரங்குகள் திறக்கப்பட இருக்கின்றன. 

கரோனா இரண்டாம் அலையில் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்கிற கோரிக்கையை திரையரங்க உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தநிலையில் 50 சதவீத பார்வையார்களுடன் திரையரங்கு செயல்படலாம் என அரசு அறிவித்திருக்கிறது.

ஜூலை 31 முதல் திறக்கப்படும் திரையரங்குகளில் இணையதளம் மூலம்  டிக்கெட்கள் வேகமாக விற்பனையாகி வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் முகக்கவசம் அணிந்து, இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி உள்ளது.

மேலும் தெலங்கானா மாநிலத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்படுகிறது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாடிப்பட்டி அருகே சிற்றுந்து கவிழ்ந்ததில் 40 போ் காயம்

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளில் 32 பதக்கங்கள்

பாஜக சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்

சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

SCROLL FOR NEXT