சினிமா

ரன்பீர் கபூரின் சிக்ஸ் பேக் ரகசியம் 

DIN

பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்த ‘ஷம்சேரா’ படத்திற்காக சிக்ஸ்பேக் எடுக்க எவ்வளவு கடினமாக உழைத்தாரென அவரது பயிற்சியாளர் பேசியிருக்கும் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.

யாஷ் ராஜ் தயாரிப்பில் கரன் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர், வானி கபூர், சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ரன்பீர் கபூர் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிரார். மேலும் அவர் சிக்ஸ்பேக்குடன் இருக்கும் புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது. 

இப்படம் ஜூலை 22 ஆம் நாள் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

ஷம்சேரா 1800களில் வாழந்த பழங்குடி போராளியின் கதை. ஆங்கிலேய அதிகாரிகளை எதிர்த்த பழங்குடியின மக்களுக்காக போராடும் வீரனின் கதை. போராளியை சிறப்பிடித்து வைத்துள்ள இடத்தில் இருக்கும் கொடூரமான வில்லனாக சஞ்சய் தத் நடித்துள்ளார். 

ரன்பீர் சமூக வலைதளங்களில் இல்லையென்றாலும் அவரும் அவரது பயிற்சியாளரும் சிக்ஸ் பேக் குறித்து பேசிய விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ரன்பீர் பயிற்சியாளர் குனால் கிர் கூறியதாவது: 

இரட்டை வேடத்திற்காக ரன்பீர் கடினமாக உழைத்துள்ளார். மக்கள் இந்தப் படத்தினைப் பார்க்கும்போது அவர் பலமான மனிதர் என்பதை உணர வேண்டும் என திட்டமிட்டு அவரது உடலை தயார்படுத்தியுள்ளோம். அவரது சிக்ஸ் பேக் படத்திலிருந்து நம்மை விலக்காமல் படத்திற்கு தேவையானதாக இருக்கிறது. அவரை ஒரு போர் வீரனாக காட்டியுள்ளோம். பயில்வானாக காட்டவில்லை. 

தினமும் 5 விதமான உணவு. புரதச் சத்து அதிகமுள்ள மற்றும் குறைவான கார்போஹைட்ரேட் கொண்ட உணவுப் பொருள்களையே உட்கொண்டார். வாரத்திற்கு ஒருமுறை மட்டும் பீட்சா மாதிரி எந்த உணவையாவது சாப்பிடலாம். 

வாரத்தில் 5 நாட்கள் பயிற்சி கொடுத்தோம். ஒரு மணி நேர உடற்பயிற்சிகளே பொதுவாக கொடுத்தோம். அதிலும் 5 நிமிட கார்டியோ உடற்பயிற்சிகள் கட்டாயம். டிரெட் மில் ஓய்ந்தாலும் அவர் ஓய்வதில்லை. அதிகாமான படப்பிடிப்புகள் வெளியில் நடைப்பெற்றதால் வெப்பத்தையும் தூசுகலையும் சமாளிக்க அவருக்கு சில மூச்சுப் பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்தோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT