சினிமா

திரிஷாவின் 3 படங்கள் ரிலீஸுக்குத் தயாராகின்றன!

பல ஆண்டுகளாக முடங்கியுள்ள நடிகை திரிஷாவின் மூன்று படங்கள் அடுத்தடுத்து திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

DIN

பல ஆண்டுகளாக முடங்கியுள்ள நடிகை திரிஷாவின் மூன்று படங்கள் அடுத்தடுத்து திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

திரிஷா நடித்து வெளியான படங்கள் எதிர்பார்த்த வசூலை தராத காரணத்தால் அவர் நடித்த கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் ஆகிய மூன்று படங்கள் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.

இந்நிலையில், திரிஷா நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் குந்தவையாக நடித்துள்ள திரிஷாவின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், திரிஷாவும் தனது சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தி ரூ. 3 கோடியாக நிர்ணயித்துள்ளாராம்.

பொன்னியின் செல்வன் வெற்றியால், திரிஷா நடித்து வெளியாகாமல் கிடப்பில் உள்ள மூன்று படங்களுக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, திரிஷாவின் மூன்று படங்களையும் அடுத்தடுத்து வெளியிடுவதற்கு தயாரிப்பு நிறுவனத்தினர் தயாராகி வருகின்றனர். இதன்மூலம், விரைவில் திரிஷாவை மீண்டும் திரையில் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT