சினிமா

ரஜினியுடன் மீண்டும் வடிவேலு?

நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, ரஜினி 170-ஐ இயக்க இருக்கிறார். நகைச்சுவை நிறைந்த திரைப்படமான டான், ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதற்கிடையே, ரஜினி 170 படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றது. இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே தளபதி படத்தில் ரஜினியின் சகோதரராக அரவிந்த்சாமி நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகளாகிறது.

இந்நிலையில், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் ரஜினி 170-இல் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி - வடிவேலு இணைந்து நடித்த சந்திரமுகி, குசேலன் உள்ளிட்ட படங்களின் நகைச்சுவை இன்றும் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ள நிலையில், சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இவர்களின் கூட்டணி இணையவுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“House No: 0! ஒரே வீட்டில் 80 வாக்காளர்கள்! சிரிக்காதீங்க!” ஆதாரங்களுடன் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

சீனாவுக்கு 3 மாதம்; இந்தியாவுக்கு 3 வாரம்! அமெரிக்காவுக்கும் 50% வரிவிதிக்க காங்கிரஸ் கோரிக்கை!

உடை தாங்கும் இடை... அமைரா தஸ்தூர்!

சின்ன திரை வரலாற்றில் முதல்முறை.... திரிவேணி சங்கமமாகும் 3 தொடர்கள்!

SCROLL FOR NEXT