முகப்பு
சினிமா

இனி விஜய் - 68 அப்டேட்!

லியோ பரபரப்பு முடிந்ததால் இனி விஜய் - 68 படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:11 AM
பகிர்:

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. பாடல் காட்சி ஒன்றை எடுத்துள்ளனர்.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தென்னாபிரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், லியோ படத்தின் போஸ்டரைப் பகிர்ந்த வெங்கட் பிரபுவிடம், விஜய் - 68 தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “நாமும் தொடங்க வேண்டும் வெங்கட் பிரபு” எனக் கூறியுள்ளார்.

இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த்,  வைபவ், சினேகா, லைலா, பிரியங்கா மோகன், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.