முகப்பு
சினிமா

பிரம்மாண்டமாக நடைபெறும் லால் சலாம் இசை வெளியீட்டு விழா!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:25 AM
பகிர்:

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

லால் சலாம் படத்தின் படிப்பிடிப்பு முடிந்தநிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அகியோருக்கான டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.