முகப்பு
சினிமா

புஷ்பா 2 டீசர் வெளியானது!

புஷ்பா - 2 ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Updated On : 8 ஏப்ரல், 2024 at 6:06 AM
பகிர்:

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா - 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. சமந்தாவின் 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டி தொட்டியெங்கும் அதிர்ந்தது.

தற்போது, புஷ்பா - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை படக்குழுவினர் திங்கள்கிழமை காலை வெளியிட்டுள்ளனர்.

புஷ்பா - 2 ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →