முகப்பு
செய்திகள்

லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் சந்திப்பு!

லோகேஷ் - அல்லு அர்ஜுன் சந்திப்பு குறித்து...

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 6:09 AM
லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன்
பகிர்:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் அல்லு அர்ஜுனைச் சந்தித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இப்படத்தின் அறிவிப்பு விடியோ வெளியாகி கவனத்தைப் பெற்றது. அனிருத் இசையமைத்த பின்னணி இசையும் வைரலானது.

Advertisement

இப்படத்தின் பட்ஜெட் ரூ. 800 கோடி என்றும் இதில் அல்லு அர்ஜுன் ரூ. 400 கோடி சம்பளம் பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சூர்யாவை வைத்து இயக்க இருந்த இரும்புக்கை மாயாவி திரைப்படத்தைதான் அல்லு அர்ஜுன் படமாக லோகேஷ் எடுப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து தங்களின் புதிய திரைப்பட பணிகள் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். இருவருமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

summary

director lokesh kanakaraj met actor allu arjun recently

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments