ஒன்ஸ் மோர் பட இந்திரா பாடல் வெளியீடு!
நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் புதிய பாடல் வெளியானது...
நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் ”ஒன்ஸ் மோர்” திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் நடிகர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “ஒன்ஸ் மோர்”. இப்படத்தில், நடிகை அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
நவீன கால இளைஞர் ஒருவரின் காதலைப் பேசும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை “மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்” நிறுவனம் தயாரித்துள்ளது.
Advertisement
Advertisement
மலையாள திரையுலகில் வெளியான “ஹிருதயம்” படத்தின் இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள ஒன்ஸ் மோர் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில், ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் “இந்திரா” எனும் புதிய பாடலை வெள்ளிக்கிழமை (ஏப். 3) அன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.