முகப்பு
செய்திகள்

இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் இசையமைப்பாளரான அனிருத்!

அனிருத் சம்பளம் குறித்து...

Updated On : 8 மார்ச், 2026 at 4:03 PM
அனிருத்
பகிர்:

இசையமைப்பாளர் அனிருத் இந்தியாவிலேயே அதிக சம்பளம் இசையமைப்பாளராக வளர்ந்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் 15 ஆண்டுகளாகத் திரைத்துறையில் இருக்கிறார். நூற்றுக்கணக்கான ஹிட் பாடல்களைக் கொடுத்ததுடன் பின்னணி இசைக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார்.

திரையிசைக் கலைஞராக மட்டுமல்லாது உலகம் முழுவதும் இசைக் கச்சேரிகளையும் நடத்தி அசத்தி வருகிறார்.

Advertisement

லியோ திரைப்படத்திற்குப் பின் ஜெயிலர், விடாமுயற்சி, கூலி ஆகிய படங்களின் பாடல்களும் பின்னணி இசையையும் பெரிதாகக் கவனம் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமில் அதிகம் ரீல்ஸ் செய்யப்பட்ட இசைகள் என்கிற சாதனையையும் படைத்தன.

அடுத்ததாக, ஜெயிலர் - 2, தலைவர் - 173, ரஜினி - கமல் திரைப்படம், அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில், அல்லு அர்ஜுனின் 23வது திரைப்படத்துக்கு இசையமைக்க அனிருத் ரூ. 25 கோடி சம்பளம் பெறவுள்ளாராம். இதுவே, இந்திய இசையமைப்பாளர் ஒருவர் பெறும் அதிகபட்ச சம்பளமாக கருதப்படுகிறது. இப்படம் ரூ. 800 கோடியில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

reports suggests music director anirudh get rs. 25 salary in allu arjun movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.