FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அட்லி - அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் பெயர்!

அட்லி - அல்லு அர்ஜுன் படத்தின் பெயர் அறிவிப்பு...

அல்லு அர்ஜுன் - sun pictures
பகிர்:

நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அட்லி நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படத்தை ரூ. 600 கோடி பட்ஜெட்டில் இயக்கி வருகிறார். உலகின் முதன்மையான விஎஃப்எக்ஸ் நிறுவனங்கள் இப்படத்திற்காக பணியாற்றி வருகின்றன. ஒட்டுமொத்த படப்பிடிப்பும் மும்பையில் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது.

நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மிருணாள் தாக்குர், ஜான்வி கபூர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான இன்று இப்படத்திற்கு, 'ராக்கா' எனப் பெயரிட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், ஆச்சரியப்படும் வகையில் பான் உலகத் திரைப்படமாக ஆங்கிலம், கொரிய, சீன மொழிகளிலும் இப்படம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ராக்கா வணிக ரீதியாகவும் மிகப்பெரிய கவனம் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

summary

allu arjun and atlee movie titled as raaka produced by sun pictures

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments