அது என்ன 37? ராக்கா அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!
ராக்கா திரைப்படத்தின் அப்டேட்...
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் ராக்கா திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அட்லி நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ராக்கா எனப் பெயரிட்டுள்ளனர். உலகின் முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனங்களின் மேற்பார்வையில் இதன் முக்கிய காட்சிகள் உருவாகி வருவதால் அவதார் போன்று மிகச்சிறப்பான காட்சியனுபவங்களக ராக்கா எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
மேலும், ஆச்சரியப்படும் வகையில் பான் உலகத் திரைப்படமாக ஆங்கிலம், கொரிய, சீன மொழிகளிலும் இப்படம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ராக்கா வணிக ரீதியாகவும் மிகப்பெரிய கவனம் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன் நாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் மிருணாள் தாக்கூர், ரஷ்மிகா மந்தனா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், ‘37’ என்கிற எண்ணைப் பதிவிட்டு ராக்கா எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனால், ராக்கா அப்டேட் வரப்போகிறது என அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மகிழ்ந்தாலும் இந்த எண் எதைக் குறிக்கிறது எனக் குழம்பியும் உள்ளனர்.
ஒருவேளை, செப். 21 ஆம் தேதி அட்லியின் பிறந்த நாளை முன்னிட்டு அப்டேட் வரும் என்பதைக் குறிப்பிடும் விதமாக 3 * 7 = 21 என்பதாக இருக்குமோ என்றும் சிலர் யோசித்து வருகின்றனர்.
An update on the movie Rakka, starring actor Allu Arjun, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.