எஸ் ஆர் புரடக்ஷன் சார்பில் பி. ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிக்க, புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்”.
மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் தெலுங்கு நாயகி நிஹாரிகா கொனிடேலா இணைந்துள்ளார். இவர் நடிகர் வருண் தேஜின் தங்கை, நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம் சிஎஸ் விக்ரம் வேதா, கைதி, பார்க்கிங் ஆகிய வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.