மார்டன் உடையில் நடிகை கனிகா | இன்ஸ்டாகிராம்
சினிமா

அவரா, இவர்? ஸ்டைலான எதிர்நீச்சல் நாயகி!

எதிர்நீச்சல் தொடரில் சேலையில் பார்த்த ஈஸ்வரியை தற்போது மார்டன் உடையில் பார்ப்பதால் எதிர்நீச்சல் ரசிகர்கள் பலர் வியப்படைந்துள்ளனர்.

DIN

எதிர்நீச்சல் தொடரில் 4 நாயகிகளில் ஒருவராக நடித்துவரும் நடிகை கனிகா மார்டன் உடையில் வெளியிட்டுள்ள படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

எதிர்நீச்சல் தொடரில் சேலை அணிந்து, கணவர் ஆதி குணசேகரனுக்கு கட்டுப்பட்டு நடக்கும் சாந்தமான மனைவியாக வரும் ஈஸ்வரி பாத்திரத்தில் நடிகை கனிகா நடித்து வருகிறார்.

எதிர்நீச்சல் தொடரில் எப்போதுமே சேலையில் பார்த்த ஈஸ்வரியை தற்போது மார்டன் உடையில் பார்ப்பதால் எதிர்நீச்சல் ரசிகர்கள் பலர் வியப்படைந்துள்ளனர்.

நடிகை கனிகா

அதுமட்டுமின்றி எதிர்நீச்சல் தொடரில் ஈஸ்வரியாக நடிக்கும் கனிகாவுக்கு பிளஸ் 2 படிக்கும் மகளும் உண்டு. கல்லூரி செல்லும் மகனும் உண்டு. மார்டன் உடையில் பாதி வயது குறைந்தவர் போல தோற்றமளிப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை கனிகா

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நடிகை மதுமிதா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் நடிகை கனிகா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை உள்ளிட்டோரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

எதிர்நீச்சல் தொடரில் நடிகை கனிகா, மதுமிதா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா

எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கிய ஆரம்பக்கட்டத்திலிருந்தே பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. பெண் சுந்தந்திரம், கலாசாரம் குறித்து பல சர்ச்சையான கருத்துகளும் வெளிப்படையாக காட்சிப்படுத்தப்பட்டது.

எதிர்நீச்சல் தொடரில் வீட்டிற்கு அடங்கிய மருமகள்களாக நடித்துவரும் நடிகை கனிகா தற்போது மார்டன் உடையில் படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பு இதேபோன்று நடிகை மதுமிதாவும் மார்டன் உடையில் வெளியிட்டிருந்த படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT