நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன்  இன்ஸ்டாகிராம்
சினிமா

நயன்தாராவுடன் பத்தாண்டு: விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

இயக்குநர் விக்னேஷ் சிவன் காதலர் தினத்துக்கு நெகிழ்ச்சியான பதிவினை எழுதியுள்ளார்.

DIN

இயக்குநர் விக்னேஷ் சிவன் காதலர் தினத்துக்கு நெகிழ்ச்சியான பதிவினை எழுதியுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் 1140 கோடி வசூலித்தது. 

குழந்தைகளுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர்.

அவர்களது குழந்தைகளுக்கு உயிர், உலக் என வித்தியாசமாக பெயரிட்டுள்ளார்கள். 

குழந்தைகளுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், “காதலை நம்பும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள். எனது தங்கத்துடன் ஒரு தசாப்தம். எனது உயிரும் உலகமுமாய் இருந்தவள் நீ; தற்போது உயிர் உலகம் நாமாக மாறியிருக்கிறோம். வயது முதிர்வில் இன்னும் கடந்து வந்த பல தருணங்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம்.

நமது முதுமையிலும் அடுத்த பிறவிகளிலும் ரசிக்க பல தருணங்களுடன் நீண்ட தூரம் என்னுடன் வந்ததுக்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். எனது உயிரானவளே உன்னை அதிகமாக காதலிக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உலகில் அதிகாரப் பரவல்’: இந்தியா - இயூ ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டிய ஐ.நா. பொதுச் செயலா்

காந்தியடிகள் நினைவு நாள்: காங்கிரஸாா் அஞ்சலி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

காதலிக்க மறுத்த மாணவி வீட்டின் முன்பு கல்லூரி மாணவா் தீக்குளிப்பு

பள்ளத்தில் தேங்கிய நீரில் முழ்கி சிறுவன் உயிரிழப்பு

SCROLL FOR NEXT