ஹாய் திரைப்படத்தின் புதிய போஸ்டர்!
ஹாய் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது...
நடிகர்கள் கவின், நயன்தாரா நடிப்பில் உருவான ஹாய் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படத்துக்கு “ஹாய்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.
அதில், இனிப்பான ஆச்சரியம் வந்துகொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளனர். இது இப்படத்தின் வெளியீட்டுத் தேதியாக இருக்கலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.