முகப்பு
செய்திகள்

வரவேற்பைப் பெற்ற காதலர் நாள் மறுவெளியீட்டுத் திரைப்படங்கள்!

மறுவெளியீட்டுத் திரைப்படங்களுக்கு வரவேற்பு...

Updated On : 18 பிப்ரவரி 2026, 1:53 pm IST
பகிர்:

காதலர் நாளை முன்னிட்டு வெளியான மறுவெளியீட்டுத் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளன.

காதலர் நாளை முன்னிட்டு நடிகர் மாதவனின் மின்னலே, நடிகர் சூர்யாவின் மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் பிப். 13 அன்றும் குணால் நடித்த காதலர் தினம் திரைப்படம் பிப். 14 ஆம் தேதியும் மறுவெளியீடாகின.

மேலும், நடிகர் டி. ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா திரைப்படமும் பிப். 13 அன்று வெளியானது. ஆனால், போதுமான திரைகள் கிடைக்கவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், காதலர் நாளன்று திரைக்கு வந்த இத்திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்ததுடன் இன்றைய இளம் வயதினரும் ரசித்து பார்த்ததாகப் பதிவிட்டு வருகின்றனர்.

முக்கியமாக, மௌனம் பேசியதே மற்றும் காதலர் தினம் திரைப்படங்களைத் திரையரங்கில் பார்த்தவர்கள் ரீல்ஸாக வெளியிட்டு தங்களின் மகிழ்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்த இரண்டு திரைப்படங்களின் பாடல்களுக்கும் ரசிகர்கள் நடனமாடிய உற்சாகமடைந்த விடியோக்களும் வைரலாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.