சினிமா

காதலில் நான் கற்றுக்கொண்ட 3 பாடங்கள்: மாளவிகா மோகனன் பகிர்ந்த அறிவுரை!

DIN

நடிகை மாளவிகா மோகனன் காதல் குறித்து தான் கற்றுக்கொண்ட 3 பாடங்களை பகிர்ந்துள்ளார்.

பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் படத்தில் மாளவிகாவின் நடிப்பு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது.

தமிழில் நடிகர் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் நடிகையாக மாளவிகா மோகனன் அறிமுகமானார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் பெரும் வெற்றி பெற்றது.

மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.  பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

காதலர் தினத்துக்கு மாளவிகா மோகனன் இன்ஸ்டாவில் பகிர்ந்த பதிவு:

மிகைப்படுத்தப்பட்ட காதல், ரொமான்ஸ்களில் இருந்து நான் கற்றுக்கொண்ட 3 பாடங்கள் இவை

1. நமது அடுத்தக் கட்ட வளர்ச்சியை பார்க்கும் நபரைத் தேர்ந்தெடுங்கள் (இது மட்டுமே போதுமென நான் அழுத்திக்கூற முடியாது). நாம் துவண்டுகிறபோது நம்மை சரியான பாதைக்கு கூட்டிச்செல்லுகிறவராக இருக்க வேண்டும். மாறாக, நமது கனவுகளை நிறைவு செய்யும்படி பொய்யாக புகழ்ந்துபேசுபவராக இருக்க தேவையில்லை. ஒவ்வொரு வெற்றி பெற்ற பெண்கள் பின்பும் ஆண்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (ஆதித்யாமோகன், கே.யு. மோகன் எனக்கு உயர்ந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள்).

2. அமைதியான வாழ்க்கை. ஆர்வம் மிகுந்த காதலர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவது மிகவும் சாதாரணம். ஒரு நபருக்கு உணர்ச்சிகரமான நேரத்தில் தேவைப்படாமல் போவது என்பது நபருக்கு நபர் மாறுபடும். ஆனால் நீண்டநாள் உறவில் அமைதியான வாழ்க்கை அமையாவிட்டால் அதில் எந்த அர்த்தமும் இல்லை. உறவுகளில் ஏற்றத் தாழ்வுகள் இயல்பானது.

3.செயல்களை கவனியுங்கள்; வார்த்தைகளை அல்ல. பென்ஜமின் ப்ராங்ளின் கூறியதுபோல, ‘நன்றாக கூறியதைவிட நன்றாக செய்தது சிறந்தது’. தனிப்பட்ட முறையில் நான் சொல்லுகிறபடி நடப்பவர்களை மட்டுமே நம்புகிறேன்.

இன்னமும் அதிகமாக கூற விரும்புகிறேன். ஆனால் இப்போதைக்கு இது போதும். வேறொருநாள் மீதியை தொடரலாம். இந்தப் புகைப்படங்களுக்கும் இந்த எழுத்துக்கும் சமபந்தமில்லை. அழகாக இருப்பதால் பகிர்கிறேன். காதலர் தின வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருத்துறைப்பூண்டி கிழக்குக் கடற்கரை புறவழிச் சாலையில் ஒளிரும் விளக்குகள் வசதி

தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள்!

ரஷியாவிடமிருந்து காா்கிவ் பகுதிகள் மீட்பு: உக்ரைன்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிப்பு

SCROLL FOR NEXT