சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அசோக் செல்வன், தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது.
இதனிடையே, சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த சபா நாயகன் திரைப்படம், டிச.22ஆம் தேதி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், சபா நாயகன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று (பிப். 14) வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.