நடிகர் விஜயுடன் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், தயாரிப்பாளர் சுதன் சுந்தரம். படம் | நித்திலன் இன்ஸ்டா
சினிமா

‘மகாராஜா’ பட இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் விஜய்!

‘மகாராஜா’ பட இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டினார் நடிகர் விஜய்.

DIN

‘மகாராஜா’ படத்தைப் பார்த்துவிட்டு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் விஜய்.

மகாராஜா படத்தைப் பார்த்து தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், ஜகதீஷ் பழனிசாமி மற்றும் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனை நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “அன்புள்ள விஜய் அண்ணாவுக்கு..இந்த சந்திப்புக்கு நன்றி. உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். மகாராஜாவைப் பற்றி நீங்கள் கூறியவை என்னைப் பெருமைப்படுத்துகின்றன. அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்திற்கு நான் மிகவும் நன்றி. லவ் யூ ணா” எனக் குறிப்பிட்டுள்ளார். நித்திலன் சுவாமிநாதன்

நடிகர் விஜயுடன் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன்

விஜய் சேதுபதி நடித்து நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியான படம் மகாராஜா. அனுராக் கஷ்யப், மம்தா மோகன் தாஸ், அபிராமி, சிங்கம் புலி , நட்டி, பாரதிராஜா, முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவான மகாராஜா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மகாராஜா திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

இந்த நாள் இனிய நாள்!

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT