விஜய் ஆண்டனி DOTCOM
சினிமா

யாருக்கு வாக்களிக்க வேண்டும்? விஜய் ஆண்டனி அறிவுரை

மக்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று விஜய் ஆண்டனி கேட்டுக் கொண்டுள்ளார்.

DIN

மக்களவைத் தேர்தலில் அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும் என்று நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கோவை, சேலம், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெறும் விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி குறித்த ஆலோசனையும், விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ பட வெளியீடு தொடர்பர்பான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது:

“ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவையில் நிகழ்ச்சி நடத்தியதும், மேலும் தற்போது அடுத்த நிகழ்ச்சி கோவையில் நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் உள்ளது. மக்களுக்காக யார் சேவை செய்கிறார்களோ, உழைக்கிறார்களோ அவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

சின்ன படமோ, பெரிய படமோ கதை நன்றாக இருந்தால் படம் வெற்றி பெறும். தற்போது வெளியாகி உள்ள மஞ்சுமோல் பாய்ஸ் படத்திற்கு எந்தவிதமான டிரெய்லர், செய்தியாளர்கள் சந்திப்பும் நடத்தவில்லை. ஆனால், மக்கள் அதனை விரும்பி பார்க்கிறார்கள். நல்ல படம் வெளியிடுவதற்கு திரையரங்கம் தேவையில்லை சமூக வலைதளங்கள் போதும்.

மக்கள் அனைவரும் கட்டாயமாக வாக்கு செலுத்த வேண்டும். நமக்கு பிடித்தவர்களுக்கு வாக்கு செலுத்துவதைவிட நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்று அறிந்து வாக்கு செலுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்கிறார்கள் ஐந்து நிமிடம் யோசித்து வாக்கு செலுத்துங்கள் எதிர்காலம் நல்லா இருக்கும். நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம்.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். மக்களுக்கு நன்மை செய்வதற்கு அரசியல் வந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தெருவாக சென்றுகூட மக்களுக்கு நல்லது செய்யலாம்.

ஆயிரம் படம் எடுத்தாலும் பிச்சைக்காரன் படத்துக்கு ஈடாகாது. பிச்சைக்காரன் திரைப்படம் அம்மாவை முழுமையாக குறித்த கதையாக இருந்தது போல், ரோமியோ படம் கணவன், மனைவிக்கு இருக்கும் பழக்கவழக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

SCROLL FOR NEXT