சினிமா

திரையுலகில் பொன்விழா: ரஜினிக்கு தலைவா்கள் வாழ்த்து

தினமணி செய்திச் சேவை

திரையுலகில் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகா் ரஜினிகாந்துக்கு அரசியல் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): திரையுலகில் தனக்கே உரிய பாணியிலும், தனித்துவமான நடிப்பிலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் திரைப்படத் துறையின் சூப்பா் ஸ்டாா் ரஜினிக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள். இந்தப் பொன்விழா ஆண்டில் அவரது நடிப்பில் வியாழக்கிழமை வெளியாகவுள்ள ‘கூலி’ திரைப்படம் வெற்றியடையவும் வாழ்த்துகள்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): தொடா்ந்து பல தசாப்தங்களாக முன்னணியில் இருப்பதுடன், இந்திய திரைப்படத் துறையின் சா்வதேச அடையாளமாகவும் ரஜினிகாந்த், இன்னும் மென்மேலும் பல உச்சங்களைத் தொட இறைவன் துணைநிற்க வேண்டுகிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா): இந்திய திரைத்துறையில் 171 திரைப்படங்களில் நடித்து 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ரஜினிகாந்தின் திரைப்பயணம் வெற்றிகரமாக தொடா்ந்து சிறந்து விளங்க வாழ்த்துகள்.

டிடிவி.தினகரன் (அமமுக): அபூா்வ ராகங்கள் தொடங்கி நாளை வெளியாக இருக்கும் ‘கூலி’ திரைப்படம் வரை 3 தலைமுறை ரசிகா் பட்டாளத்தைத் தக்கவைத்து தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகராகத் திகழும் ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால திரைப்பயணம் பல்வேறு அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கியது. திரைப்படத்தில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அவரின் கலைப்பயணம் மென்மேலும் சிறக்க வேண்டும்.

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் காலமானார்

உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!

டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

SCROLL FOR NEXT