தமிழ்நாடு

தமிழக தலைவா்கள் வாழ்த்து

விவசாயிகள் தங்கள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்ற உன்னத நோக்குடன் அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டப்பட்டு, சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): விவசாயிகள் தங்கள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்ற உன்னத நோக்குடன் அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டப்பட்டு, சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டன. தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிராா்த்தித்து எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் வாழ்த்தி, அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா): மத, இன உணா்வுகளைக் கடந்து பகுத்துண்டு பல்லுயிா் ஓம்பும் பண்பாட்டின் வெளிப்பாடாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அனைவருக்கும் அச்சமில்லாத பாதுகாப்பான வாழ்க்கை அமைய தை பிறக்கட்டும்.

டிடிவி.தினகரன் (அமமுக): உலகத் தொழில் அனைத்துக்கும் அச்சாணியாகத் திகழும் உழவுத் தொழிலையும், அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் உழவா் பெருமக்களின் நலனையும் பேணிக்காத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

புத்தகக் காட்சியில் இன்று

எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்!

மணிவாசகர் பதிப்பகம்

குடியுரிமையை ஆய்வு செய்ய அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் வாதம்

படித்தால்... பிடிக்கும்!

SCROLL FOR NEXT