முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஆர்வமும் ஈடுபாடும்

தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக 'ஒளடதம்' படத்தின் மூலம் அறிமுகமானார் நேதாஜி பிரபு.

Updated On : 8 பிப்ரவரி 2026, 4:33 pm IST
பகிர்:

தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக 'ஒளடதம்' படத்தின் மூலம் அறிமுகமானார் நேதாஜி பிரபு. மெடிக்கல் மாஃபியாக்களைப் பற்றிப் பேசியது அந்தப் படம். 'ஒளடதம்' படத்துக்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு.

சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் செய்யும் வகையில் அவர், அட்டகாசமான ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார். தனது தோற்றத்துக்காக உடல் எடையைக் கூட்டி முறுக்கேற்றி, சுமார் ஓர் ஆண்டாக தாடி வளர்த்து, தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். இந்த போட்டோ ஷூட்டில் எட்டு விதமான ஸ்டைல்களில் எட்டு விதமான மாறுபட்ட தோற்றங்களில் 15 மணி நேரத்தில் 30 உடைகள் மாற்றி எடுத்துள்ளார். இப்படிப்பட்ட தோற்ற மாற்றங்களில் 500}க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்து இதுவரை யாரும் செய்யத் துணியாத வகையில், இந்த போட்டோ ஷூட்டை நடத்தி முடித்துள்ளார். இதன் மூலமாக தமிழ்த் திரையுலகில் தனது அடுத்த கணக்கைத் தொடங்குவதற்கு ஆர்வமாக களம் இறங்கி உள்ளார் நேதாஜி பிரபு.

அவர் பேசும் போது, ''எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிக்கக் கூடிய வகையில் உடல், உள்ளம், தோற்றம், ஆர்வம், ஈடுபாடு, அர்ப்பணிப்பு என அத்தனை கோணங்களிலும் தன்னை முழுத்தகுதியாக்கிக் கொண்டு களத்துக்கு வந்துள்ளேன். சினிமா என்பது தன்னை நோக்கிக் காதலுடனும் அர்ப்பணிப்புடனும் வருபவர்களைக் கைவிடாது என்பதற்கு உதாரணமாக நான் இருப்பேன்.

Advertisement

Advertisement

சினிமாவை யாரும் ஏனோ தானோ என்றோ, அலட்சியமாகவோ பார்க்கக் கூடாது. தனக்கான தகுதி உள்ளவர்களை அது அணைத்துக் கொள்ளும் என்பதைச் சொல்லும் வகையில் இதைச் செய்துள்ளேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments