@Ags_production
சினிமா

டிராகன் ரூ.100 கோடி வசூல்: பார்வையாளர்களுக்கு நூறு கோடி முறை நன்றி! -இயக்குநர் நெகிழ்ச்சி

'டிராகன்’ திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்து சாதனை

DIN

‘டிராகன்’ திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக அப்படத்தின் இயக்குநரும் நடிகருமான அஷ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் விறுவிறு திரைக்கதைப் பின்னணியில் சாமானிய இளைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் கடந்த பிப்.21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், இயக்குநராக கோமாளி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக கலக்கியுள்ள ‘டிராகன்’ பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நாயகிகள் கயாது லோஹார், அனுபமா பரமேஸ்வரனுடன். இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி திரையில் யதார்த்த நடிப்பை பார்வையாளர்களுக்கு வெளிக்காட்ட அத்துடன், லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில் படத்தின் பாடல்களும் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், இன்று(மார்ச் 2) அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்துள்ள சமூக வலைதளப்பதிவில் பார்வையாளர்களுக்கு நூறு கோடி முறை நன்றி என்று பொருள்பட நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

SCROLL FOR NEXT