குட் பேட் அக்லி படத்தின் 2-ஆவது பாடல் இன்று வெளியாகிறதா?
குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து 2-ஆவது பாடல்...
குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து 2-ஆவது பாடலின் முன்னோட்ட காணொலி இன்று வெளியிடப்பட உள்ளது.
முன்னதாக, குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில் வெளியான ஓஜி சம்பவம்.. பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது. இந்த பாடலை ஜி. வி. பிரகாஷுடன் இணைந்து படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சொந்த குரலில் பாடியிருக்கிறார்.
இப்பாடல் காணொலி வெளியிடப்பட்ட கடந்த 10 நாள்களில் சுமார் 2.20 கோடிக்கும் மேல் யூடியூப் வலைதளத்தில் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தநிலையில், இன்று(மார்ச் 29) மாலை 5.50 மணிக்கு இரண்டாவது பாடலைப் பற்றி அறிவிப்பை வெளியிடப் போகிறோம் என்று அறிவித்துள்ளது படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ்.
கண்டிப்பாக ஒலிபெருக்கிகளில் சத்தத்தை அதிகமாக வைத்து ரசிகர்கள் கேட்கும் ரகத்தில் இரண்டாவது பாடல் உருவாகியிருப்பதாக சின்னதாக ஒரு சஸ்பென்ஸ் வைத்துள்ளது படக்குழு. அப்புறமென்ன.. அஜித் ரசிகர்கள் குஷியோ குஷிதான்!
இத்திரைப்படம் ஏப்ரல் 8 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.