விஜய் தேவரகொண்டா படம் | விஜய் தேவரகொண்டா சமூக ஊடகப் பதிவிலிருந்து
சினிமா

விபத்துக்குள்ளான விஜய் தேவரகொண்டாவின் கார்!

விஜய் தேவரகொண்டாவின் கார் விபத்து!

இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் தேவரகொண்டாவின் கார் திங்கள்கிழமை(அக். 6) விபத்துக்குள்ளானது. எனினும், நல்வாய்ப்பாக இந்த விபத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு பெரியளவிலான காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்திக்குச் சென்றுவிட்டு ஹைதராபாத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, விஜய் தேவரகொண்டாவின் கார் விபத்தில் சிக்கியது. சாலையில் சென்ற இன்னொரு கார் அவரது காரின் மீது பக்கவாட்டில் மோதி உரசியதில், விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தெலங்கானாவின் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து, மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு விஜய் தேவரகொண்டா அதில் ஏறிச் சென்றுள்ளார். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Actor Vijay Deverakonda’s car damaged in minor accident

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகமதாபாத்தில் தங்கக் கடத்தலை முறியடித்த டிஆர்ஐ அதிகாரிகள்!

கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதும் அல்ல; தீர விசாரிப்பதே மெய்! - ‘அவிஹிதம்’

பெர்த் டெஸ்ட்டில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்; ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் இலக்கு!

தஞ்சைப் பெரிய கோயில் - 50 வேலைத்திட்டம் - நூல் அறிமுகம் | விமர்சனம்

ஐந்து உறுப்பினர் குழு அரசல் புரசல் செய்திகளுக்கு முடிவு கட்டும்: ப.சிதம்பரம்

SCROLL FOR NEXT