கருப்பு... 
சினிமா

சரவெடி ஆயிரம் பத்தனுமா... தீபாவளிக்கு கருப்பு முதல் பாடல்!

கருப்பு படத்தின் முதல் பாடல் அப்டேட் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் ஆக்சன் அதிரடி கதையாக நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கருப்பு. இந்தப் படத்தில் சூர்யா வழக்குரைஞராக நடித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.

சூர்யாவுடன் த்ரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் தீபாவளி விருந்தாக வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், கிராபிக்ஸ் பணிகளால் அடுத்தாண்டுக்கு தள்ளிப்போனது.

இருப்பினும், சூர்யா ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக கருப்பு திரைப்படத்தின் பாடல் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் ‘சரவெடி ஆயிரம் வெடிக்கனுமா...’ எனப் பதிவிட்டிருந்தது. அதனை உறுதிபட்டுத்தியுள்ள தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தீபாவளியன்று கருப்பு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

suryas karuppu movie first single update

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக ரத்ததான முகாம்

ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறையை திறக்கக் கோரிக்கை

சுவா் இடிந்து விழுந்து வடமாநில இளைஞா் உயிரிழப்பு

மிதுன ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT