உயா்நீதிமன்றம் 
சினிமா

‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை விதித்த உயா்நீதிமன்ற உத்தரவை மீறியதாக ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

தினமணி செய்திச் சேவை

சென்னை: இசையமைப்பாளா் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை விதித்த உயா்நீதிமன்ற உத்தரவை மீறியதாக ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகா் அஜித் உள்ளிட்ட பலா் நடித்த ‘குட் பேட் அக்லி’  திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்தப் படத்தில், ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்சக் குருவி ’ஆகிய பாடல்களைத் தனது அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, ரூ.5 கோடி இழப்பீடு கோரி இசையமைப்பாளா் இளையராஜா சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து இளையராஜா தரப்பில் மைத்ரி மூவி மேக்கா்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இடைக்காலத் தடை உத்தரவை மீறி, இளையராஜா பாடல்கள் சம்பந்தப்பட்ட படத்தில் தொடந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும். நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். தவறும்பட்சத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வதை தவிர, வேறு வழியில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

தமிழக முழு நேர டிஜிபி தோ்வு: செப்.26-இல் யுபிஎஸ்சி கூட்டம்

SCROLL FOR NEXT