செய்திகள்

ஜெயம் ரவி - ஏ .எல்.விஜய் இணையும் 'வனமகன்'! 

நடிகர் 'ஜெயம்' ரவி- இயக்குனர் ஏ .எல்.விஜய் முதன்முறையாக இணையும் திரைப்படத்தின் பெயர் 'வனமகன்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: நடிகர் 'ஜெயம்' ரவி- இயக்குனர் ஏ .எல்.விஜய் முதன்முறையாக இணையும் திரைப்படத்தின் பெயர் 'வனமகன்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி-அரவிந்த் சாமி இணைந்து நடித்திருக்கும் 'போகன்' திரைப்படம் டிசம்பர் 23-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் 'மிருதன்' இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் 'டிக் டிக் டிக்' எனப்படும் விண்வெளி சம்பந்தப்பட்ட படம் மற்றும் ஏ.எல்.விஜய்யின் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

தற்போது ஏ.எல்.விஜய்-ஜெயம் ரவி கூட்டணி படத்தின் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு 'வன மகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

படத்தின் தலைப்பை கொண்டே இந்த கதை காடு மற்றும் காடு சார் வாழ்க்கை பின்னணியில் அமைந்தது  என்பதை அறியலாம். இதற்கு முன்பு 'பேராண்மை' திரைப்படத்தில் ஜெயம் ரவி பழங்குடியின இளைஞராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுமார் 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் போஸ்!

தென் அமெரிக்க நாடுகளுக்குப் புறப்பட்டார் ராகுல்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

யு19 கிரிக்கெட்: இந்தியா அபாரம்

'ஏ' அணிகள் டெஸ்ட்: தொடரை வென்றது இந்தியா

SCROLL FOR NEXT