ராமின் தரமணி படப் பாடல்களை வெளியிடுகிறார் ரஜினி!
படத்தின் பாடல்களை ரஜினி நாளை வெளியிடவுள்ளார்.
இயக்குநர் ராம் படத்தின் அறிவிப்புகள் என்றாலே அதில் ஓர் ஈர்ப்பும் பரபரப்பும் இருக்கும்.
தங்க மீன்கள் படத்துக்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் - தரமணி.
வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் பாடல்களை ரஜினி நாளை வெளியிடவுள்ளார். மேலும் படத்தின் 2-வது டீசரும் நாளை வெளியிடப்படுகிறது.
Advertisement
படத்தின் புதிய போஸ்டர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.