செய்திகள்

திருமணம் நின்று போனது ஏன்? காரணத்தை வெளியிட்ட த்ரிஷா!

கடந்த ஜனவரி மாதம் நிச்சயிக்கப்பட்ட தனது  திருமணம் நின்று போனது ஏன் என்ற காரணத்தை பத்திரிக்கையாளர்களிடம் நடிகை த்ரிஷா பகிர்ந்து கொண்டுள்ளார்.

DIN

சென்னை: கடந்த ஜனவரி மாதம் நிச்சயிக்கப்பட்ட தனது  திருமணம் நின்று போனது ஏன் என்ற காரணத்தை பத்திரிக்கையாளர்களிடம் நடிகை த்ரிஷா பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா.  கடந்த ஜனவரி மாதம் இவருக்கும் சென்னையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் வருண்மணியன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென திரிஷாவின் திருமணம் நின்று போனது. அதற்கு என்ன காரணம் என்பது பற்றி இரு தரப்பிலும் இருந்து எதுவும் தெரிவிக்கபபடவில்லை.

இந்த நிலையில் திரிஷா நடித்த 'தர்மயோகி' என்ற திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட  த்ரிஷாவிடம் நிருபர்கள், ' திருமணத்துக்கு பிறகு சினிமாவில் தொடர்வீர்களா? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த திரிஷா எனது திருமணம் நின்று போன காரணமே அதுதான்;  என்னை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டவர், நான்  நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியதால் தான் என் திருமணம் நின்று போனது. நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க சொன்னதால் திருமணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். நான் கடைசி வரை தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT