முகப்பு
செய்திகள்

விரைவில் ஓர் ஆச்சர்யமான செய்தி!: தமன்னா

கவர்ச்சி இல்லாத வலுவான கதாபாத்திரங்களிலும் என்னால் திறமையை... 

Updated On : 25 ஜனவரி, 2024 at 6:28 AM
பகிர்:

இந்த வருடம் தமன்னாவுக்கு மிகவும் ராசியாக அமைந்துள்ளது. அவர் நடித்து வெளிவந்த தோழா, தேவி, தர்மதுரை என மூன்று தமிழ்ப் படங்களுமே வெற்றி பெற்றுள்ளன. 

வெற்றிப்பாதையில் பயணிப்பது குறித்து தமன்னா கூறும்போது:

நான் அடுத்து நடிக்கவுள்ள படங்களைப் பற்றி இப்போது கூறமுடியாது. ஆனால் அந்தத் தகவல்கள் வெளிவரும்போது எல்லோரையும் அது ஆச்சர்யப்படுத்தும். என்னுடைய ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நான் இந்தப் படங்களில் இடம்பெறுகிறேன் என்கிற விஷயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 

தர்மதுரை படத்தில் கவர்ச்சியான வேடம், ஹீரோவுடன் காதல் செய்வது என எதுவும் இல்லை. இருந்தும் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்த முடிவு பலனளிக்கிறது. நடிப்புக்காக ஒரு விருதும் பெற்றேன். கவர்ச்சி இல்லாத வலுவான கதாபாத்திரங்களிலும் என்னால் திறமையை வெளிப்படுத்தமுடிகிறது. அதனால்தான் தர்மதுரை, தேவி போன்ற படங்களில் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள் என்றார்.

தற்போது சிம்புவுக்கு ஜோடியாக அன்பானவன், அசராதவன், அடங்காதவன் என்கிற படத்தில் நடித்துவருகிறார் தமன்னா. விஷாலுக்கு ஜோடியாக நடித்த கத்திச்சண்டை, பொங்கல் அன்று வெளிவருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →