பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் டீக்கடையில் பணியாற்றிய அர்ஷத் கானை ஒரு புகைப்படக்கலைஞர் படமெடுத்து அதை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். பார்க்க அழகாக, இளமையாக, நீலநிறக் கண்களுடன் இருந்ததால் அர்ஷத் கானின் படம் வியப்புடன் பலராலும் பகிரப்பட்டது. இதனால் அவரைப் பற்றிய செய்திகளும் வெளியாகின.
ஒரு கிளிக் அர்ஷத் கானின் வாழ்க்கையை மாற்றியது. இணையத்தால் பிரபலமான அர்ஷத் கானை நேரில் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொள்ள பலரும் வந்தார்கள். இணையத்தினால் உள்ளூரிலும் உலக அளவிலும் பிரபலமானார்.
இதையடுத்து அவருக்கு மாடலிங் வாய்ப்புகளும் வந்ததால் வாழ்க்கையே மாறிப்போனது. டீக்கடை மாஸ்டராக இருந்தவர் ஒரேநாளில் மாடல் ஆகியுள்ளார். இப்போது அவரைப் பற்றிய சாய்வாலா என்கிற வீடியோ ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கும் நிறைய ரசிகர்கள் கிடைத்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.