2017 இறுதியில் நாக சைதன்யா - சமந்தா திருமணம்!
திருமணத்துக்குப் பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பார். இந்த நிலையை அவர் அடைய...
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளார்கள்.
ஒரு பேட்டியில் சமந்தாவுடனான காதல் குறித்து நாக சைதன்யா கூறியதாவது: திருமணத் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும். முதலில் என் சகோதரர் அகிலுக்குத் திருமணம் நடைபெறும். 2017 கடைசியில் எங்களுடைய திருமணம் நடைபெறும்.
திருமணத்துக்குப் பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பார். இந்த நிலையை அவர் அடைய மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். என்னைப் போல எந்தப் பின்புலமும் இல்லாமல் தெலுங்குத் திரையுலகில் சாதித்துள்ளார். அவர் குடும்பத்தில் முதல் ஆளாக நடிக்க வந்தவர். அவர் பட்ட கஷ்டங்களும் அவருடைய சாதனைகளும் என் சாதனைகளை விடவும் வியப்பளிக்கக்கூடியவை என்றார்.