முகப்பு
செய்திகள்

புதுமையான வேடத்தில் அனுராக் காஷ்யப்!

இமைக்கா நொடிகள் படத்தின் ஒவ்வொரு செய்தியும் ஏதோ ஓர் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:43 AM
பகிர்:

இமைக்கா நொடிகள் படத்தின் ஒவ்வொரு செய்தியும் ஏதோ ஓர் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

அதர்வா, நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தை டிமாண்டி காலனி புகழ் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இப்போது பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஏ.ஆர். முருகஸ்தாஸின் அகிரா படத்தில் வில்லனாக நடித்திருந்தார் அனுராக் காஷ்யப்.

'இமைக்கா நொடிகள்' படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இதுபற்றி கூறும்போது: ஏ.ஆர். முருகதாஸின் 'அகிரா' படத்தில், கருணையற்ற போலீஸ் அதிகாரியாக நடித்து, ரசிகர்களின் அமோக பாராட்டுகளை பெற்றவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். எங்களின் 'இமைக்கா நொடிகள்' கூட்டணியில் அவர் இணைந்திருப்பது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. ருத்ரா என்னும் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும், இதுவரை தமிழ் ரசிகர்கள் ஒரு திரில்லர் படத்தில் கண்டிராத புதுமையான வேடத்தில் அவர் நடிக்கிறார் என்கிறார். இவர், ஏ.ஆர். முருகதாஸிடம், '7 ஆம் அறிவு' மற்றும் 'துப்பாக்கி' போன்ற படங்களில் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர்.

முழு கட்டுரையைப் படிக்க →