முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம்: அதிகாரபூர்வ தகவல்கள்! 

இதன் படப்பிடிப்பு நவம்பர் 11 முதல் ஆரம்பமாகும் என்று...

Updated On : 14 அக்டோபர், 2016 at 12:08 PM
பகிர்:

தனி ஒருவன் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் இயக்குநர் மோகன் ராஜா. இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சிவகார்த்திகேயன், பி.சி.ஸ்ரீராம் கூட்டணியில் உருவான ரெமோ படத்தைத் தயாரித்த 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தையும் தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு நவம்பர் 11 முதல் ஆரம்பமாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் என முக்கிய நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.