தமிழ், ஹிந்தியில் ரீமேக் ஆகவிருக்கும் மோகன்லால் படம்!
வசூலில் சாதனை படைத்துள்ள புலி முருகன், மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆக உள்ளது.
மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜெகதிபாபு, நமிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வைஷாக் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன மலையாளப் படம் - புலி முருகன்.
வசூலில் சாதனை படைத்துள்ள புலி முருகன், மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆக உள்ளது. இந்தப் படத்தின் உரிமையை வாங்க பலத்த போட்டி நிலவியது.
புலி முருகன் படத்தின் இந்திய உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ்.பி.பிள்ளை பெற்றுள்ளார். இதனையடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது.