செய்திகள்

உடை நழுவியபோது...: பிரிட்டினி ஸ்பியர்ஸ் எப்படிச் சமாளித்தார்?

DIN

பிரபல பாடகி பிரிட்டினி ஸ்பியர்ஸ் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் பாடிக் கொண்டிருந்தபோது அவருடைய மேலாடை நழுவியது. 

34 வயதான பிரிட்டினி ஸ்பியர்ஸ், லாஸ் வேகாஸில் உள்ள ’ப்ளானட் ஹாலிவுட் ' என்ற காஸினோ வகை ரிஸார்ட்டில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பாடினார். 

அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் அணிந்திருந்த இறுக்கமான மேலாடையின் ஸ்ட்ராப் அவிழ்ந்துவிட்டது! ஸ்பியர்ஸ் அச்சமயத்தில் ஜோன் ஜெட் மற்றும் ப்ளாக் ஹார்ட்ஸ் ஆன்த்தமிலிருந்து 'ஐ லவ் ராக் அண்ட் ரோல்’ என்ற பாடல் வரியைப் பாடிக் கொண்டிருந்த கணத்தில்தான் அவரது ஆடை நெகிழ்ந்துவிட்டது.

உடனடியாக தன்னுடைய கைகளால் உடலை மறைத்துக் கொண்டார் பிரிட்டினி ஸ்பியர்ஸ். அவருடன் மேடையில் ஆடிக்கொண்டிருந்த டான்ஸர்கள் ஓடோடி வந்து அவரை மறைத்து அவர் அணிந்திருந்த அந்தச் சிறிய மேலாடையை சரி செய்தனர். ஒருவழியாக மீண்டும் பாடத் தொடங்கினார் பிரிட்டினி ஸ்பியர்ஸ்.

பிரிட்டினி ஸ்பியர்ஸைப் பொறுத்தவரையில் இதுபோன்று ஆடை பிரச்னை முதன்முறையாக நடந்ததல்ல. சில மாதங்களுக்கு முன்னர் 'கிவ் மீ மோர்’ என்ற பாடலுக்கு அவர் ஆடிக் கொண்டிருந்தபோது, இதேபோல் ஆடை நழுவியது. அப்போது அவருடன் ஆடிக்கொண்டிருந்த ஆண் பாடகர் தன்னுடைய ஷர்ட்டை அவருக்குக் கொடுத்து உதவினார். 

எனவே, இதற்கெல்லாம் அசந்து போகிறவர் அல்ல ஸ்பியர்ஸ். என்ன நிகழ்ந்தாலும் அவர் தங்குத்தடையில்லாமல் அதே உற்சாகத்துடன் பாடி ஆடக்கூடியவர். பிரிட்டினி ஸ்பியர்ஸின் ரசிகர்கள் இச்சம்பவத்தை வாட்ஸ் அப் மூலம் உலகெங்கும் பரப்பிவருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

SCROLL FOR NEXT