முகப்பு
செய்திகள்

நடிகர் ஜெய் ஒன்றும் அஜித் கிடையாது: தயாரிப்பாளர் சாடல்!

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ஜெய் கலந்துகொள்ளவில்லை.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:35 AM
பகிர்:

இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் இயக்கிய பிரியாணி, மாஸ் ஆகிய இரண்டு படங்களும் சரியாகப் போகவில்லை. இதனால் அவர் மீண்டும் தனக்குப் பெயர் வாங்கித் தந்த சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். சிவா, ஜெய், வைபவ், விஜயலட்சுமி, மஹத், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்துக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சென்னை 28-2 படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபாவளி முடிந்து அடுத்து இரு வாரங்கள் கழித்து வெளிவரவுள்ளது. அதாவது நவம்பர் 10 அன்று சென்னை 28-ன் இரண்டாவது பாகம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ஜெய் கலந்துகொள்ளவில்லை. இப்படத்தில் நடித்துள்ள தயாரிப்பாளர் சிவா பேசும்போது இதைக் குறிப்பிட்டுப் பேசினார். அவர் கூறியதாவது:

அஜித் சார் அவருடைய படம் தொடர்புடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. ஆனால் அதுவே அவர்மீது பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. திரையில் மட்டுமே அவரைக் காணமுடியும். ஆனால் அவர் ஒரு நிலைமைக்கு வந்தபிறகே இந்த முடிவை எடுத்தார். அஜித் இடத்துக்கு வருவதற்கு நிறைய உழைப்பு தேவைப்படும். சில நடிகர்கள் ஆரம்பத்திலேயே இந்த முடிவை எடுக்கிறார்கள். நடிகர் ஜெய்யைத்தான் குறிப்பிடுகிறேன். அவர் வெங்கட் பிரபு படத்தின் நிகழ்ச்சிக்கு வராமல் இருந்திருக்கக்கூடாது. அவருக்கு இந்த மேடை அவசியம். அவர் நிகழ்ச்சிக்கு வராதது குறித்து அவரை வைத்து படம் பண்னும் தயாரிப்பாளர்தான் முடிவு செய்யவேண்டும் என்றார்.  

முழு கட்டுரையைப் படிக்க →