பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது அடுத்த சர்வதேச ப்ராஜெக்ட் என்ன என்பது குறித்த தகவலை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற நடிகைளுள் ஒருவர் ப்ரியங்கா சோப்ரா. இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான 'குவான்டிகோ'வில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்து விட்டார். அத்துடன் இவர் ஞாயிறு அன்று நடைபெற்ற 68-ஆவது எம்மி விருதுள் வழங்கும், விழாவில், சிவப்புக் கம்பள மரியாதையுடன் கலந்து கொண்டார்.
இந்நிலையில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், 'புதிதான ஒரு விஷயத்தை செய்வதில் உள்ள த்ரில்..அதுதான் என்னை வழிநடத்துகிறது. அடுத்தது என்ன? காத்திருங்கள்' என்று தகவல் பகிர்ந்துள்ளார்.
ப்ரியங்கா தற்போது 'குவான்டிகோ' தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்துவருகிறார். இது இந்தியாவில் வரும் 26-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.