செய்திகள்

தோனியால் வெளியேற்றப்பட்ட 3 வீரர்கள் யார்? சர்ச்சையை ஏற்படுத்தும் படம்!

இந்த மூன்று வீரர்களும் ஒருநாள் அணிக்குப் பொருத்தமாக இல்லை....

ஐஏஎன்எஸ்


இந்திய அணி கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். இயக்கம் - நீரஜ் பாண்டே.

இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் வெளியான ஒரு காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவினரிடம், இந்த மூன்று வீரர்களும் ஒருநாள் அணிக்குப் பொருத்தமாக இல்லை என்று தோனி சொல்வது போல ஒரு காட்சி உள்ளது. உன்னை வளர்த்துவிட்ட வீரரை அணியிலிருந்து நீக்குகிறாயா என்று கேள்வி கேட்ட தேர்வுக்குழு உறுப்பினரிடம், நாமெல்லாம் நாட்டுக்காகப் பணியாற்றுகிறோம் என்று தோனி பதிலளிப்பது போலவும்
 உள்ளது. 

இதனையடுத்து அந்த 3 வீரர்களின் பெயர்கள் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மூத்த வீரர்களை அந்தக் காட்சி குறிப்பிடுகிறதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 

இதுகுறித்து இயக்குநர் நீரஜ் பாண்டே பேட்டியளித்ததாவது:

 அந்தக் காட்சி படத்தில் உள்ளது. அதேசமயம் அந்த 3 வீரர்களின் பெயர்களைச் சொல்லவேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். அந்த 3 வீரர்கள் மீதான மரியாதைக்காகவும் பெயர்கள் குறிப்பிடப்பட்டால் அது தவறாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாலும் அதைத் தவிர்த்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி, செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT