செய்திகள்

60 நாடுகள், 4500 திரையரங்குகள்: சாதனை நிகழ்த்தும் தோனி படம்!

DIN

இந்திய அணி கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். இயக்கம் - நீரஜ் பாண்டே. இந்தப் படம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.

தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்பதால் உலகம் முழுக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவருவதால் படத்தைத் திரையிட பெரும்பாலான திரையரங்கு அதிபர்கள் ஆர்வமாக உள்ளார்கள். எனவே இந்தப் படம் தற்போதைய நிலவரப்படி 60 நாடுகளில் 4500 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

ஓர் இந்தியப் படம் இவ்வளவு வீச்சுடன், அதிக திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை என்கிறார் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸின் விஜய் சிங். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT