முகப்பு
செய்திகள்

தோனி படம்: இரண்டாம் பாகத்துக்கு தோனி மறுப்பது ஏன்?

இரண்டாம் பாகம் வேண்டாம். ஏனெனில் அது சர்ச்சைக்குரியதாக இருக்கும்.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:39 AM
பகிர்:

இந்திய அணி கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். இயக்கம் - நீரஜ் பாண்டே. இந்தப் படம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தோனி கூறியதாவது:

முதலில் தோனி படத்தைத் தொடங்கியபோது எதை வைத்து படம் எடுப்பார்கள் என நினைத்தேன். ஏனெனில் என் வாழ்க்கையில் வில்லன்கள் கிடையாது. என் வாழ்க்கை குறித்த தகவல்கள் இந்தப் படம் குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம் இந்தப் படத்துக்கு இரண்டாம் பாகம் வேண்டாம். ஏனெனில் அது சர்ச்சைக்குரியதாக இருக்கும். 2011-க்குப் பிறகு சர்ச்சைகள் மட்டும்தான் உள்ளன. என் வாழ்க்கையில் அதைத்தவிர வேறெதுவும் இல்லை. வில்லன்கள் மட்டும்தான் உள்ளார்கள் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.