செய்திகள்

அப்பாவுடன் சேர்ந்து நடிக்க அத்தனை ஆசை: சொல்வது அக்ஷரா ஹாசன்  

சரியான ஒரு கதை அமைந்தால் அப்பாவுடன் சேர்ந்து நடிக்க அத்தனை ஆசையாக உள்ளேன் ...

IANS

சென்னை: சரியான ஒரு கதை அமைந்தால் அப்பாவுடன் சேர்ந்து நடிக்க அத்தனை ஆசையாக உள்ளேன் என்று நடிகர் கமலஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன்   தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், 'அப்பாவுடன் சேர்ந்து நடிக்க அத்தனை ஆசையாக உள்ளேன்.ஆனால் அதற்கு பொருத்தமான ஒரு கதை அமைய வேண்டும், அது எனக்கு மட்டுமின்றி அப்பாவுக்கும் ஒரு ஈடுபாட்டினை உருவாக்குவதாக அமைய வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

தற்பொழுது தனது தந்தை கமல் இயக்கத்தில் உருவாக்கி வரும் 'சபாஷ் நாயுடு' படத்தில் உதவி இயக்குநராக அவர் பணி புரிந்து வருகிறார். முன்னதாக ஹிந்தியில் அமிதாப் பச்சன், தனுஷுடன் சேர்ந்து 'ஷமிதாப்' படத்தில் நடித்துள்ள அவர் தற்போது திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் பெண் வேடத்தில் வேடத்தில் நடித்துள்ள 'லாலி கி ஷாதி மெய்ன் லாடூ தீவானா' என்னும்படம் விரைவில்வெளிவர உள்ளது.

அதேபோல் தமிழில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ள 'விவேகம்' படமும் விரைவில் வெளிவர உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT